top of page

நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது ஒரு தொடர்ச்சியான பணி: துணைப் பிரதமர் ஹெங்

Vasantham Seithi | 12 August 2019

 


சிங்கப்பூர் போன்ற பல கலாசாரச் சமூகத்தில் நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பது ஒரு தொடர்ச்சியான பணி என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியிருக்கிறார்.


உலகெங்கும் இனம், மொழி, சமயம் ஆகியவை தொடர்பில் பிரச்சினைகள் எழும் நிலையில் சிங்கப்பூர் தொடர்ந்து அதன் பல கலாசாரத் தன்மையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார் அவர்.


இன, சமய நல்லிணக்கத்தின் தொடர்பில் கடந்த பல ஆண்டாகச் சிங்கப்பூர் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது.


இருப்பினும் செய்யவேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாய்க் கூறினார் துணைப் பிரதமர் ஹெங்.


வெவ்வேறு இனங்கள், சமயங்கள் ஆகியவை குறித்த சகிப்புத்தன்மைக்கும் அப்பால் சிங்கப்பூரர்கள் பின்பற்றவேண்டிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.


சமூகங்கள் ஒன்றையொன்று மதிப்பதுடன், அவற்றுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று திரு. ஹெங் கூறினார்.


பெங்கூலன் வட்டாரத்தைச் சுற்றியுள்ள 8 வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய மரபுடைமைச் சுற்றுலாவிற்குப் பிறகு அவர் பேசினார்.


Faithful Footprints எனும் புதிய திட்டத்தின் ஓர் அங்கமாக அந்தச் சுற்றுலா இடம்பெற்றது.


துமாசிக் அறக்கட்டளையும், Humanity Matters எனும் அரசாங்கச் சார்பற்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மரபுடைமைச் சுற்றுலாவில் அறுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Posts

Commentaires


bottom of page