top of page

சமயத் தலைவர்கள் உருவாக்கிய காய்கறிப் பண்ணை

Tamil Murasu | 11 September 2021

 
சிங்கப்பூரின் பல்வேறு சமயத் தலைவர்கள், தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த சிங்கப்பூர்வாசிகள் என 18 பேர், ஃபேய்த்@வர்க் வேளாண் பண்ணையைச் சேர்ந்து உருவாக்கினர். அப் பண்ணையை திரு தர்மன் சண்முகரத்தினம் நேற்று திறந்து வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கத்­தரிக்­காய், கொய்­யாப்­ப­ழம், கரு­ணைக்­கி­ழங்கு போன்ற பல்­வேறு தட்­ப­வெப்ப நிலை­க­ளுக்கு ஏற்ற, எளி­தில் வள­ர்க்கக்­கூ­டிய காய்­க­றி­க­ளைக் கொண்ட வேளாண் பண்­ணையை இங்­குள்ள சம­யத் தலை­வர்­களும் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் தென்­கி­ழக்­கா­சிய நாட்­ட­வ­ரும் சேர்ந்து உரு­வாக்­கி­யுள்­ள­னர்.


சிறப்­புத் தேவை­யுள்­ளோ­ருக்­கான கெனோ­சியா பள்­ளி­யில் அது உரு­வாக்­கப்­பட்­டது.


பண்­ணை­யைத் திறந்­து­வைத்த சமு­கக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் திரு தர்­மன் சண்­மு­க­ரத்­தி­னம், பொது­ந­ல­னுக்­காக பலர் ஒன்­று­தி­ர­ளும்­போது ஏற்­படும் பெரிய தாக்கத்துக்கு இந்தப் ­பண்ணை சான்று என்று தெரிவித்தார்.

Yorumlar


bottom of page