top of page

காசாவுக்கு $85,000 நிவாரண பொருட்கள்; சிங்கப்பூர் மனிதாபிமான அமைப்பு உதவி

Tamil Murasu | 31 May 2021

 

மத்­தி­யக் கிழக்கு காசா பகு­திக்கு உதவி தேவை என்று அனைத்­துலக அளவில் கோரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது.


அதற்­குச் செவி­சாய்க்­கும் வகை­யில் ‘ஹியுமானிட்டி மேட்­டர்ஸ்’ என்ற ஓர் உள்­ளூர் அமைப்பு $85,000 மதிப்­புள்ள நான்கு டன் நிவா­ர­ணப் பொருட்­க­ளைத் திரட்டி காசாவுக்கு அனுப்­பு­கிறது.


அவை வரும் வாரங்­களில் எகிப்­தின் கெய்ரோ நக­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­படும். முகக்­க­வ­சங்­கள், கையு­றை­கள், உடை­கள், மூக்குக் கண்­ணா­டி­கள், உடலை சுத்­தப்­படுத்­தும் மருந்து கலந்த ஈரத் துடைப்­புத்­தாட்­கள் முத­லான பல­வும் அவற்றில் அடங்­கும்.


எட்டு உயிர்வாயு செறி­யூட்­டி­கள், போர்­வை­கள் ஆகி­ய­வை­யும் அனுப்­பப்­படும்.

‘ஹியு­மா­னிட்டி மேட்­டர்ஸ்’ என்ற மனி­தா­பி­மான அமைப்பு 2019ல் அமைக்­கப்­பட்­டது. அதில் பல சம­யத்­தி­ன­ரும் இருக்­கி­றார்­கள்.


நிவா­ர­ணப் பொருட்­கள் கொவிட்-19 விதிமுறை­க­ளைப் பின்­பற்றி மிக­வும் கவ­ன­மாக மூன்று வகை­க­ளா­கப் பிரித்து தொகுக்­கப்­பட்­ட­தாக இந்த அமைப்­பின் பேச்­சா­ளர் கூறி­னார்.


சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, துப்­பு­ரவு, உதவி ஆகிய மூன்று வகை­க­ளாக பொருட்­கள் பிரித்து வகைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.


இவை காசா­வில் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­க­ளுக்­கும் சுகா­தார பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வும் என்று அறிக்கை ஒன்­றில் இந்த அமைப்பு தெரி­வித்­தது.


காசா பகு­தி­யில் பல ஆண்டு களில் இல்லாத வகை­யில் படு­மோ­ச­மான வன்­செ­யல்­கள் இடம்­பெற்று ஓய்ந்­துள்­ளன.


எகிப்து சம­ரச முயற்­றி­க­ளின் விளை­வாக ஹமாஸ் அமைப்­பிற்­கும் இஸ்­ரே­லுக்­கும் இடை­யில் அமைதி இணக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.


ஸ்ரீ நாரா­ணய மிஷன், அனைத்­து­லக பல கலா­சார நிறு­வ­னம், முஸ்­லிம் வழக்­க­றி­ஞர்­கள் சங்­கம், இளம் சீக்­கி­யர் நிறு­வ­னம், சிங்­கப்­பூர் தாவோ­யிஸ்ட் மிஷன் முத­லான பல அமைப்­பு­களும் இந்த முயற்­சி­யில் ஹியு­மா­னிட்டி மேட்­டர்ஸ் அமைப்­புக்கு ஆத­ரவு அளித்­து உள்­ளன.


நிவா­ர­ணப் பொருட்­கள் சிங்­கப்­பூ­ரில் இருந்து கெய்­ரோ­வுக்கு இந்த வாரம் செல்­லும். அங்­கி­ருந்து எகிப்­திய செம்­பி­றைச் சங்­கம் மூலம் பாலஸ்­தீ­னிய செம்­பி­றைச் சங்­கத்­தி­டம் அவை ஒப்­ப­டைக்­கப்­படும்.


ஹியு­மா­னிட்டி மேட்­டர்ஸ் அமைப்பு, 2009 மற்­றும் 2012 ஆம் ஆண்­டு­களில் காசா­வுக்கு இத்­த­கைய நிவா­ரண உத­வி­க­ளைச் செய்து உள்­ளது.


இத­னி­டையே, இது பற்றி கருத்து தெரி­வித்த அனைத்­து­லக பல கலா­சார நிறு­வ­னத்­தின் தலை­மைச் செய­லா­ளர் திரு டென்­னிஸ் கூ, “சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பாதிப்பை நாம் அனு­ப­வித்து வரு­கி­றோம். இதோடு வள்­செ­யல் தாக்கு­த­லும் இடம்­பெற்­றால் நிலைமை எப்­படி இருக்­கும் என்­பதைக் கற்­பனை செய்­து­கூட பார்க்க இய­ல­வில்லை,” என்­றார்.


“பல சமய அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து உதவி தேவைப்­படும் பெரிய ஒரு சமூ­கத்­திற்கு உதவ வாய்ப்பு கிட்டி உள்­ளது.


“நாம் ஒன்றிணைந்து மனி­தாபி­மான உத­வி­க­ளைச் செய்ய பல வழி­கள், ஏற்­பா­டு­கள் இருக்க வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது,” என்­றும் அவர் மேலும் கூறி­னார்.

Comments


bottom of page